ஏப்ரல் மாதத்தில் மின்னல் எப்எம்மில் மீண்டும் கலப்படம்- தொடர்பு துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் அறிவிப்பு

26 ஜனவரி 2026, 7:15 AM
ஏப்ரல் மாதத்தில் மின்னல் எப்எம்மில் மீண்டும் கலப்படம்- தொடர்பு துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் அறிவிப்பு

கோலாலம்பூர் ஜன 26- வரும் ஏப்ரல் மாதத்தில் மின்னல் எப்எம்மில் மீண்டும் கலப்படம் ஒளியேறும் என்று தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

லெம்பா பந்தாய் நாடாளுமன்ற தொகுதி ஏற்பாட்டில் இன்று தித்திக்கும் தைப்பொங்கல் தமிழர் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது

தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் மற்றும் ஒற்றுமை துறை துணை அமைச்சர் யூனிஸ் வரன் இந்த விழாவில் முக்கிய பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்.

முன்பெல்லாம் மலேசிய வானொலியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணிக்கு கலப்படம் ஒளியேறும்.

கலப்படம் நிகழ்ச்சி வழி ஏராளமான இளம் கலைஞர்கள் உருவாக்கப்பட்டார்கள்.

ஆனால் இப்போது கலப்படம் நிகழ்வு ஒளியேற்றப் படவில்லை.

மின்னல் எப்எம் பண்பலையில் மீண்டும் கலப்படம் ஒளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை என் பார்வைக்கு வந்துள்ளது.

அந்த வகையில் வரும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் கலப்படம் ஒளியேறும் என்று தைப்பொங்கல் விழாவில் உரையாற்றிய போது பலத்த கரவொலிக்கிடையே அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன.

லெம்பா பந்தாய் கெஅடிலான் தொகுதி உதவித் தலைவர் பக்தவச்சலம் வரவேற்புரையாற்றினார். மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், மின்னல் பண்பலை தலைவர் குமரன், லெம்பா பந்தாய் கெஅடிலானை சேர்ந்த ஷினா, ஸ்டார் மணியம், பிரிந்தா, ரேமன் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.