மலேசியா 5,207 ஹெக்டேர் நிலத்தை இந்தோனேசியாவிற்கு வழங்கியதா? பிரதமர் அன்வார் மறுப்பு.

24 ஜனவரி 2026, 8:58 AM
மலேசியா 5,207 ஹெக்டேர் நிலத்தை இந்தோனேசியாவிற்கு வழங்கியதா?  பிரதமர் அன்வார்  மறுப்பு.

புக்கிட் மெர்தாஜாம், ஜனவரி 24 — மலேசியா, சபா-கலிமந்தான் எல்லைப் பகுதியில் உள்ள நுனுக்கான் பகுதியில் உள்ள மூன்று கிராமங்களுக்கு ஈடாக 5,207 ஹெக்டேர் நிலத்தை இந்தோனேசியாவிற்கு வழங்கியதாக வெளியான ஊடக செய்திகளை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மறுத்தார். எவ்வாறாயினும், நில ஈட்டுப் பிரச்சினை குறித்து மலேசியா அண்மையில் நட்புறவு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என்றும் அன்வார் தெரிவித்தார்.

"அந்த செய்திகள் உண்மையல்ல. நாங்கள் முறையாக பேச்சுவார்த்தை நடத்துவோம்" என்று பெர்மாத்தாங் பாசிரில் உள்ள செபராங் பிறை தெங்கா மாவட்ட கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற மடாணி கலாசாரக் கண்காட்சி மற்றும் பினாங்கு மக்கள் விருந்து 2026 நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிகையாளர்களிடம் சுருக்கமாக கூறினார்.

இந்த நிகழ்வில் புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினரும் நிறுவனர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சருமான ஸ்டீவன் சிம், மற்றும் பினாங்கு துணை முதல்வர் டத்தோ டாக்டர் முஹம்மது அப்துல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர். அண்மையில் வெளியான ஊடக செய்திகளில், வட கலிமந்தானில் உள்ள நுனு கானின் மூன்று கிராமங்கள் இப்போது மலேசியாவிற்கு மாற்றப்பட்டுள்ளது, ஆனால் புலாவ் செபாடிக் பகுதியில் எல்லைப் பிணக்கு தீர்க்கப்படவில்லை என்றும், மலேசியாவிடமிருந்து இந்தோனேசியா 5,207 ஹெக்டேர் கூடுதல் பகுதியைப் பெற்றதாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது.

நேற்று, இயற்கை வள மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர்தர் ஜோசப் குரூப், நிலவர எல்லை ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு இணங்க, இரு நாடுகளுக்கிடையேயான நில எல்லை குறித்த பிணக்கு பகுதிகளின் (OBP) குறியீடு மற்றும் அளவீடு பற்றிய பேச்சுவார்த்தைகள் இணக்கமான முறையில், பரிமாற்றம், ஈடு அல்லது "லாபம் மற்றும் நஷ்டம்" ஆகிய தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு அல்லாமல் நடத்தப்படுவதாக கூறினார்.

அவரது கூற்றுப்படி, 45 ஆண்டுகளுக்கும் மேலாக விரிவான மற்றும் வெளிப்படையான தொழில்நுட்ப பேச்சுவார்த்தை களுக்கு பிறகு, நில எல்லை அளவீட்டின் இறுதிச் செய்தி பிப்ரவரி 18, 2025 அன்று மலேசியா மற்றும் இந்தோனேசியா இடையேயான ஒரு நினைவு ஒப்பந்தம் (MoU) மூலம் முத்திரையிடப் பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.