கோலாலம்பூர், ஜன 23-நியூசிலாந்தில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என வெளியுறவு அமைச்சு உறுதிசெய்துள்ளது.
மவுண்ட் மவுங்கானுய் பகுதியில் உள்ள ஒரு முகாம் தளத்தில், உள்ளூர் நேரப்படி காலை மணி 9.30 அளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வெலிங்டனில் உள்ள மலேசிய உயர் ஆணையரகம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்துவருவதாக அமைச்சு ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"இந்தச் சம்பவம் தொடர்பில், வெலிங்டனில்உள்ள மலேசிய உயர் ஆணையரகம், சம்பந்தப்பட்டநியூசிலாந்து அதிகாரிகளுடனும் ஆக்லாந்து மலேசிய சங்கத்துடனும் நெருங்கிய தொடர்பில்உள்ளது," என்று அந்த அறிக்கைகுறிப்பிட்டது.
"இந்த நிலச்சரிவில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை அமைச்சுஉறுதிப்படுத்தியுள்ளது."
தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள், உயர் ஆணையரகத்தை +64-4-385 2439 (பொதுத்தொலைபேசி எண்) அல்லது +64-21-044 0188 (அவசர உதவி/அலுவலக நேரத்திற்குப் பிறகு) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனஅமைச்சு கூறியது. nz.cons@kln.gov.my என்ற மின்னஞ்சல் வழியாகவும் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.


