பெந்தோங், ஜன 23- கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையின் 71.6 கிலோமீட்டரில், கிழக்கு திசையைநோக்கிச் செல்லும் வழியில் இன்று பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர்விபத்தில் சிக்கி லேசான காயமடைந்தார்.
மாரான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவைச் (BSPT) சேர்ந்த லான்ஸ் கோப்ரல் சுலாக்மல் இசா, சாலையில் சிந்தியிருந்த எண்ணெய் காரணமாக வழுக்கி விழுந்ததாகநம்பப்படுகிறது என்று பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யாஹ்யா ஓத்மான்தெரிவித்தார்.
சம்பவத்தின் போது, காராக்கில்உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் (PUSPEN) நடைபெற்ற பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் பயணத்தின்இறுதி நிகழ்ச்சிக்கு அந்த அதிகாரி சென்று கொண்டிருந்தார்.
பாதிக்கப்பட்ட அதிகாரியின் நிலைமை சீராக இருப்பதாகவும், அவர் மேல் சிகிச்சைக்காக பெந்தோங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் யாஹ்யா கூறினார்.
"மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரேயில் அவருக்குப் பெரியஅளவில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், அவரது கை, இடுப்பு மற்றும் முழங்கால் பகுதிகளில் சில காயங்கள்ஏற்பட்டுள்ளது," என்றுபெர்னாமா விடம் தொடர்பு கொண்டபோது அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், பகாங்போலீசாரின் முகநூல் பதிவில், விபத்தில்சிக்கிய அதிகாரிக்கு யாஹ்யா உடனடியாக உதவிக்கரம் நீட்டியதாகத்தெரிவிக்கப்பட்டிருந்தது.
"பகாங் போலீஸ் தலைவர், பாதிக்கப்பட்டஅதிகாரியுடன் மருத்துவமனை வரை உடனிருந்து சிகிச்சை பெறுவதை உறுதி செய்தார்," என்று இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சம்பவத்திற்குப் பிறகு, அதிகாரியின்நலனையும் சுகாதார நிலையையும் உறுதி செய்வதற்காக, மருத்துவமனையில் அவரைச் சென்று பார்வையிட்டதாக யாஹ்யா மேலும் கூறினார்.


