கோலாலம்பூர், ஜன 23- 2026- 2035 ஆம் ஆண்டு வரையிலான தேசிய கல்வித் திட்டம், மலேசியக் கல்வித் துறையில் ஒரு தெளிவான மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.
பள்ளிக் கல்விக்கும், உயர்கல்விக்கும் இடையில் ஒரு நேரடித் தொடர்பு இத்திட்டம் உருவாக்கும். இதை மலாயாப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், டத்தோஸ்ரீ டாக்டர் நூர் அஸ்வான் அபு ஓஸ்மான் வரவேற்றுள்ளார்.
கல்வி என்பது தனித்தனி கட்டங்களாக இல்லாமல், தொடர்ச்சியான ஒரு பயணமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மாணவர்களின் திறமைகளை வளர்க்கவும், தரமான கல்வி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யவும் இது உதவும். அதே வேளையில், மலேசிய உயர் கல்வித் திட்டத்தின் கீழ், பல்கலைக்கழக மாணவர்களுக்கு வரலாறு மற்றும் அரசியலமைப்புச் சட்டம் குறித்த புரிதல் அவசியமாக்கப் படும்.
மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கும் அரசாங்கத்தின் முயற்சியையும் பல்கலைக்கழகம் பாராட்டியுள்ளது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கடந்த ஜனவரி 20ஆம் தேதியன்று இத்திட்டங்களை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


