கோலாலம்பூர், டிச 1- தலைநகரில் உள்ள உடம்பு பிடி மையத்தில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கல்வி அமைச்சைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகவலை மலேசியக் கல்வி அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஒழுங்கீன செயல் கொண்ட நபருக்கு எதிராக எந்தவொரு விட்டுக்கொடுக்கும் போக்கையும் அமைச்சு கடைப்பிடிக்காது என்று கே.பி.எம் உறுதிப்பட தெரிவித்து கொண்டது
முன்னதாக, 201 கைது செய்யப்பட்டவர்களில் 17 அரசு ஊழியர்கள் என்று தெரிய வந்ததாக தகவல்கள் வெளியானது. இதனை கோலாலம்பூர் மாநகர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மர்சுஸ் கூறினார்.


