ஷா ஆலம், ஜன 20: இன்று காலை ஸ்ரீ பூலாய் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் உள்ள வீடொன்றில் தீப்பிடித்ததில், 13 வயது இளைஞன் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டான்.
இச்சம்பவம் தொடர்பாக காலை 6.59 மணிக்கு அவசர அழைப்பு வந்தது என சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு செயல்பாட்டு உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
பின் 10 நிமிடங்களுக்குள் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்ததாக பெரித்தா ஹரியான் தெரிவித்தது.
பூச்சோங் மற்றும் சைபர்ஜெயா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த எட்டு பேர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியின் ஈடுப்பட்டனர். குறிப்பிட்ட வீடு 80 சதவீதம் சேதமுற்றதாக அஹ்மட் முக்லிஸ் கூறினார்.
13 வயது இளைஞன் தனது அறையில் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டான். அதே நேரத்தில் அணைக்கும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.
காலை 7.33 மணிக்கு தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், அது மற்ற பிரிவுகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டதாகவும் அஹ்மத் முக்லிஸ் குறிப்பிட்டார்.


