ரபாட், ஜன 19- மொராக்கோவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய செனகல் அணி, ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பை (AFCON) கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியின் கூடுதல் நேரத்தில் செனகல் வீரர் பேப் குயே (Pape Gueye) ஆட்டத்தின் 94-வது நிமிடத்தில் அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
முன்னதாக, ஆட்டத்தின் வழக்கமான நேரத்தின் இறுதியில் மொராக்கோ அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டபோது மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நடுவரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து செனகல் வீரர்கள் ஆடுகளத்தை விட்டு வெளியேறியதால் ஆட்டத்தில் சிறிது நேரம் இழுபறி நீடித்தது.
பின்னர் ஆட்டம் தொடரப்பட்ட நிலையில், மொராக்கோவின் நட்சத்திர வீரர் பிராஹிம் டயஸ் (Brahim Díaz) அடித்த பெனால்டி பந்தை செனகல் கோல் கீப்பர் எடுவார்ட் மெண்டி (Edouard Mendy) மிகச் சிறப்பாகத் தடுத்து நிறுத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் செனகல் கால்பந்து ரசிகர்களின் நீண்ட காலக் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது


