மொரோக்கோ, டிச 22- 2025ஆம் ஆண்டுக்கான ஆப்பிரிக்க நாடுகள் கிண்ண காற்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது. இந்த முறை மொரோக்கோ அணி உபசரணை அணியாக உள்ளது.
தொடக்க ஆட்டத்தில் மொரோக்கோ, கொமோரோஸை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆப்பிரிக்கா நாடுகள் கிண்ணப் போட்டி (AFCON) பயணத்தைத் தொடங்கியது
இளவரசர் மௌலே அப்துல்லா விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏ குழு தொடக்க ஆட்டத்தில், மொரோக்கோ அணி கொமோரோஸை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆப்பிரிக்கா நாடுகள் கிண்ணப் போட்டி (AFCON) பயணத்தைத் தொடங்கியது.
இரண்டு கோல்களையும் பிராஹிம் டயஸ் மற்றும் அயூப் எல் காபி ஆகியோர் இரண்டாவது பாதியில் அடித்தனர்.
இந்த வெற்றியின் மூலம் மொரோக்கோ தொடர்ந்து 19 ஆட்டங்களில் தோல்வியடையாத சாதனையைப் பதிவு செய்தது.
இந்த ஆட்டத்தை மொரோக்கோ இளவரசர் மௌலே ஹசன் மற்றும் ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ உட்பட 60,180 ரசிகர்கள் கண்டுகளித்தனர்.


