சீனப் புத்தாண்டு ஜோம் ஷோப்பிங் வவுச்சருக்கு விண்ணப்பிக்க அழைப்பு - புக்கிட் காசிங்

16 ஜனவரி 2026, 4:33 AM
சீனப் புத்தாண்டு ஜோம் ஷோப்பிங் வவுச்சருக்கு விண்ணப்பிக்க அழைப்பு - புக்கிட் காசிங்

ஷா ஆலம், ஜன 16 : எதிர்வரவிருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஜோம் ஷோப்பிங் வவுச்சருக்கு விண்ணப்பிக்க புக்கிட் காசிங் தொகுதி அதன் குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த வவுச்சர்கள் பிங்காஸ், SMUE அல்லது SMIS திட்டம் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும், மாதாந்திர குடும்ப வருமானம் RM3,000க்கும் குறைவாக உள்ளவர்களுக்கு, சீன புத்தாண்டை கொண்டாடுபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

மேலும், விண்ணப்பத்தாரர்கள் கட்டாயம் புக்கிட் காசிங் தொகுதியின் வாக்காளர்களாகவும் இருக்க வேண்டும்.

“ இந்த உதவி ஒரு குடும்பத்திற்கு ஒரு வவுச்சர் என்ற அடிப்படையில் வழங்கப்படும்.``

இந்த திட்டம், பண்டிக்கை காலங்களில் முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் போது குறைந்த வருமானம் பெறும் மக்களின் சுமையைக் குறைக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த உதவிக்கான விண்ணப்பாரத்தைப் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.