பொங்கல் பண்டிகையும் மக்களின் கொண்டாட்ட தயார் நிலைகளும்- சிறப்பு பார்வை

15 ஜனவரி 2026, 6:52 AM
பொங்கல் பண்டிகையும் மக்களின் கொண்டாட்ட தயார் நிலைகளும்- சிறப்பு பார்வை

கிள்ளான், ஜன 15- இன்று உலகம் முழுவதும் தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் பண்பாட்டின் அடையாளமாக இந்த பொங்கல் பண்டிகை விளங்குகிறது.

இந்நிலையில் சிலாங்கூரில் உள்ள கிள்ளான் தெங்கு கிளானா லிட்டல் இந்தியாவில் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களுக்கு ஏதுவாக அதன் தயார் நிலைகள் குறித்து பொதுமக்கள் சிலாங்கூர் மீடியாவிடம் பகிர்ந்து கொண்டனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, உழவர்களுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் ஒரு உன்னதமான விழாவாகும்.

தை மாதம் முதல் தேதியில் கொண்டாடப்படும் இந்த விழா, அறுவடைத் திருவிழாவாக உலகெங்கும் வாழும் தமிழர்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப் படுகிறது.

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, மக்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் மாதமாக தை மாதம் கருதப்படுகிறது.

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் சூரிய பகவானுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிப்பதே இப்பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.

கிள்ளான் லிட்டல் இந்தியாவில் உள்ள பொதுமக்கள் தங்களின் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு இன்று கொண்டாடும் பொங்கல் திருநாளுக்கு அதற்கு உரிய பொருட்களையும் வாங்கி கொண்டனர்.

இந்தியன் கேஷ் அண்ட் கேரி கடைகளில் மக்களின் கூட்டம் அலை மோதிய நிலையில் பொதுமக்கள் அனைவரும் புதிய பானை, பால், முந்திரி, கரும்பு, பூஜைக்கு தேவையான பூக்கள் ஆகியவை வாங்கினர்.

தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப மலர்ந்திருக்கும் இந்த தை மாதம் அனைவருக்கும் இன்பமும் நல்வாழ்வும் வழங்கவும் இறைவனை வேண்டுகிறோம். சிலாங்கூர் மீடியா தமிழ்ப் பிரிவு சார்பாக இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.