கிள்ளானில் தீ சம்பவத்திற்குப் பின்னணியாக இருந்த வேலையில்லா ஆடவர் கைது

14 ஜனவரி 2026, 9:33 AM
கிள்ளானில்  தீ சம்பவத்திற்குப் பின்னணியாக இருந்த வேலையில்லா ஆடவர் கைது

பெட்டாலிங் ஜெயா, ஜன 14- கிள்ளானில் நேற்று கம்போங் ஜொஹான் செத்தியாவில் நடந்த தீ விபத்துக்குப் பின்னணியாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் வேலையில்லாத ஆடவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

44 வயதுடைய சந்தேக நபரைப் போலீஸ் தரப்பு கைது செய்ததாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் கமாலாரிஃபின் அமான் ஷா உறுதிப்படுத்தினார்.

சந்தேக நபருக்கு 15 குற்றப்பின்னணிகள் இருக்கிறது என்றும் மேலும் 11 போதைப்பொருள் தொடர்பான குற்றங்களும் இருப்பதாக அவர் தெரிவித்ததார்.

உள்நோக்கம் காரணமாக வீட்டை தீவைத்து எரித்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 436இன் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.

முன்னதாக, நேற்று கிள்ளான் ஜொஹான் செத்தியாவில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த தீ விபத்தில் சில வீடுகள் தீக்கிரையாகின என்று போலீஸ் தெரிவித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.