கிரீன்லாந்து, ஜன 13- ஜரோப்பிய கண்டத்தின் வட பகுதியில் அமைந்துள்ள கிரீன்லாந்து பகுதி அமெரிக்காவுக்குச் சொந்தமானதல்ல.
எந்தவொரு சூழலிலும் அமெரிக்கா அதனை கையகப்படுத்தும் பரிந்துரைக்கு டென்மார்க் அரசாங்கம் செவி சாய்க்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கிரீன்லாந்து டென்மார்க் நாட்டின் ஒரு பகுதியாகும். நேட்டோ அமைப்பின் மூலமாக தான் தற்காப்பு பயிற்சிகள் நடத்தப்படும் என்று தெரிவித்தது
நேட்டோவின் கூட்டு ஒத்துழைப்பு காரணமாக கிரீன்லாந்து, டென்மார்க் ஆகியவை தற்காப்பு ஒப்பந்தத்தில் உள்ளதாக டென்மார்க் அரசு சொன்னது.
கிரீன்லாந்து பகுதியை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் பரிந்துரை என்பது நேட்டோவின் அமைதியைத் தான் சீர்குலைக்கும் என்று டென்மார்க் அரசு எச்சரிக்கை விடுத்தது.


