ஈரானிய தலைவர் ஆயதுல்லா அலி காமேனியின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது

1 மார்ச் 2026, 7:42 AM
ஈரானிய தலைவர் ஆயதுல்லா அலி காமேனியின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது

துபாய், மார்ச் 1 - அமெரிக்கா-இஸ்ரேல் வான் தாக்குதலில் ஈரானிய உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி உயிரிழந்ததாக, ஈரானிய அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இஸ்ரேலின் மூத்த அதிகாரி ஒருவர், தாக்குதலுக்குப் பிறகு ஈரான் தலைவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக Reuters செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மேலும், காமேனியின் மகள், பேரன்/பேத்தி, மருமகள் மற்றும் மருமகனும் அந்த தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து 40 நாட்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, அமெரிக்க மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதலில் காமேனி கொல்லப்பட்டதாக தெரிவித்ததற்குப் பின்னர் வெளியிடப்பட்டது.

எனவே, ஆயதுல்லா கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் முன்னதாக அறிவித்திருந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.