ரபாட், ஜன 13- ஆப்பிரிக்கா கிண்ண காற்பந்து போட்டியான ஆஃப்கோன் 2025 போட்டி அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை எகிப்து அணியும் செனெகல் அணியும் அரையிறுதி சுற்றில் மோதுகின்றன.
இவ்விரு அணிகளின் தாக்குதல் ஆட்டக்காரர்களான மொஹம்மட் சாலா, சாடியோ மனே இருவரும் மீண்டும் சந்தித்து விளையாடவுள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் இருவரும் லிவர்புல் அணியில் ஒன்றாக விளையாடினார்கள். மீண்டும் மூன்றாண்டுகளுக்குப் பிறகு அவர்கள் சந்தித்து விளையாடுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நைஜீரியா, மொரோக்கோ அணியுடன் மோதுகிறது. அரையிறுதி சுற்றில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது.


