மலேசியாவில் க்ரோக்கின் பயன்பாட்டிற்கு MCMC தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது

12 ஜனவரி 2026, 3:54 AM
மலேசியாவில் க்ரோக்கின் பயன்பாட்டிற்கு MCMC தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது

கோலாலம்பூர், ஜன 12 - நேற்று தொடங்கி, மலேசிய இணைய பயனர்கள் க்ரோக் (grok) செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த தற்காலிக தடை விதிக்கப்படுவதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி) தெரிவித்துள்ளது.

க்ரோக், ஆபாசம் மற்றும் வெளிப்டையான பாலியல் உள்ளடகங்களை உருவாக்க, தவறாகப் பயன்படுத்தப்படுவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எம்.சி.எம்.சி அறிக்கை வழி அறிவித்துள்ளது.

மேலும், மிகவும் ஆபாசம் நிறைந்த உள்ளடக்கம், அனுமதி இல்லாமல் மாற்றப்பட்ட படங்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறார்கள் சம்பந்தப்பட்ட உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எம்.சி.எம்.சி கூறியுள்ளது.

இது தொடர்பில், கடந்த ஜனவரி 3 மற்றும் 8ஆம் தேதிகளில், X Corp. மற்றும் XAI LLC ஆகிய நிறுவனங்களுக்கு, தொழில்நுட்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தக் கோரி அறிக்கை அனுப்பட்டுள்ளதாக எம்.சி.எம்.சி தெரிவித்துள்ளது.

சட்டம் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், இத்தடை ஒரு முன்னெச்சரிக்கை என்று எம்.சி.எம்.சி விளக்கியது.

பெர்னாமா

தொடர்புடைய செய்திகள்

'Grok' செயலி விவகாரம்: 'X' நிறுவனத்துடன் தொடர்பு அமைச்சின் இன்றைய சந்திப்பு முக்கிய மைல்கல்லாக அமையும் - டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

Mavitthran
21 ஜனவரி 2026
'Grok' செயலி விவகாரம்: 'X' நிறுவனத்துடன் தொடர்பு அமைச்சின் இன்றைய சந்திப்பு முக்கிய மைல்கல்லாக அமையும் - டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான 16 வயது வரம்பை இவ்வருடத்தின் இரண்டாம் பாதியில் அமல்படுத்துவதற்கு முன்னர், பல்வேறு வழிமுறைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

Pakiya
8 மார்ச் 2026
சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான 16 வயது வரம்பை இவ்வருடத்தின் இரண்டாம் பாதியில் அமல்படுத்துவதற்கு முன்னர், பல்வேறு வழிமுறைகளை அரசாங்கம்   ஆராய்ந்து வருகிறது.

தேசிய மோசடி பதிலளிப்பு மையத்தில் பிரதமர் அறிவுரை: மோசடி குற்றங்களைத் தடுக்க பொது விழிப்புணர்வை தீவிரப்படுத்துங்கள்

Evelyn Moses
4 மார்ச் 2026
தேசிய மோசடி பதிலளிப்பு மையத்தில் பிரதமர் அறிவுரை: மோசடி குற்றங்களைத் தடுக்க பொது விழிப்புணர்வை தீவிரப்படுத்துங்கள்

கூகிளின் முதலீட்டுத் திட்ட அமலாக்கத்திற்குத் தொடர்பு அமைச்சு தொடர்ந்து வழிவகுக்கும் - ஃபஹ்மி ஃபட்சில்

Evelyn Moses
27 பிப்ரவரி 2026
கூகிளின் முதலீட்டுத் திட்ட அமலாக்கத்திற்குத் தொடர்பு அமைச்சு தொடர்ந்து வழிவகுக்கும் - ஃபஹ்மி ஃபட்சில்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.