கோலாலம்பூர், ஜன 7- பாரம்பரிய வீரர்களுக்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது தொடர்பில் போலிசார் 45 புகார்களை பெற்றுள்ளனர்.
புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ருஸ்டி முஹம்மது இசா இதனை கூறினார்.
7 ஹரிமாவ் மலாயா பாரம்பரிய வீரர்களை உள்ளடக்கிய போலி ஆவணங்கள் தொடர்பான விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக 45 புகார்களை போலிசார் பெற்றுள்ளது.
மேலும் முதல் போலிஸ் புகாரை மலேசிய கால்பந்து சங்கம் கடந்த டிசம்பர் 24 அன்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் பதிவு செய்தது.
இதன் அடிப்படையில் மோசடி தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420இன் கீழ் இதுவரை போலிஸ் ஒரு விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
மேலும் இதுவரை, வணிகக் குற்றப் புலனாய்வுத் துறைக்கு மொத்தம் 45 புகார்கள் வந்துள்ளன.
விசாரணைக்கு உதவ எட்டு நபர்களின் வாக்குமூலங்களையும் நாங்கள் பதிவு செய்துள்ளோம் என்று அவர் இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இருப்பினும், எட்டு நபர்களின் அடையாளங்களை அவர் வெளியிடப்படவில்லை.


