புத்ராஜெயா, ஜனவரி 7 — லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் நிலவும் பாதுகாப்பு இல்லாத நிலையில் அத்தியாவசியமற்ற பயணங்களை ஒத்திவைக்குமாறு மலேசியர்களை வெளிநாட்டு அமைச்சு கடுமையாக வலியுறுத்தியுள்ளது.
விஸ்மா புத்ரா, அங்குள்ள சூழ்நிலையால் எந்த மலேசியர்களும் பாதிக்கப்படவில்லை என்று இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
“ஜனவரி 4, 2026 அன்று நாங்கள் கடைசியாக வெளியிட்ட அறிவிப்பிலிருந்து வெனிசுவேலாவில் உள்ள மலேசியர்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியது. “கராகஸில் உள்ள மலேசியத் தூதரகம் அங்கு பதிவு செய்யப்பட்ட மலேசியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் அனைவரும் கணக்கில் எடுக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளதாகவும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஸ்மா புத்ரா, நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவைப்பட்டால் புதுப்பிப்புகளை வழங்கும் என்றும் மேலும் கூறியது.


