சிலாங்கூரில் இந்தியர்களின் கல்வி மேம்பாட்டு திட்டத்திற்கு மாநில அரசு உதவி- மாண்புமிகு பாப்பாராய்டு தகவல்

5 ஜனவரி 2026, 8:29 AM

ஷா ஆலாம், ஜன 5- சிலாங்கூரில் வாழும் இந்தியர்களின் கல்வி மேம்பாட்டிற்காக மாநில அரசாங்கம் ஆக்கப்பூர்வ திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

அவ்வகையில் பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களின் சுமைகளைக் குறைப்பதில் மாநில அரசு கடப்பாடு கொண்டுள்ளது.

2026ஆம் ஆண்டிலும் இந்தியர்களின் கல்வி மேம்பாட்டு திட்டம் தொடர்கிறது. அதிலும் பள்ளிப் பேருந்து கட்டண உதவித் தொகை திட்டமும் உயர்க்கல்விக்கூட இந்திய மாணவர்களுக்கான நிதியுதவி திட்டங்களாகும்.

இந்த இரு கல்வி சார்ந்த திட்டங்களுக்காக 2026ஆம் ஆண்டு மாநில அரசு சார்பாக அதன் நிதி ஒதுக்கீடு 2.7 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது என்று மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் கூறினார்.

பள்ளிப் பேருந்து கட்டண உதவி தொகை திட்டம் எதிர்வரும் ஜனவரி 26 முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை விண்ணப்பம் மேற்கொள்ளலாம்.

அதேபோல், உயர்க்கல்விக்கூடங்களில் இந்திய மாணவர்களுக்கான நிதியுதவி திட்டங்களுக்கான விண்ணப்பம் மார்ச் 2ஆம் தேதி முதல் மார்ச் 13ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று பந்திங் சட்டமன்ற உறுப்பினரான அவர் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.