ஷா ஆலம் ஜன 3;-சிலாங்கூர் மாநில அரசு, இந்தியர்கள் அல்லது குடிசைவாசிகள் விவகாரங்களில் பாராமுகமாக இருப்பதாகச் சில அரசியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொன்றையும் ஆழமாக ஆராய்ந்தால் அவர்களின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பது தெரியவரும்.

கம்போங் பாப்பான் நிலம் முன்பு அரசாங்க நிலம் என்பது உண்மைதான், ஆனால் 1995 ஆம் ஆண்டில் அது பேங் நெகாராவின் கைவிடப்பட்ட வீடமைப்புக்கள் மறு மேம்பாட்டு திட்டத்திற்கு கையளிக்கப்பட்டு, பிறகு பேங் நெகாரா அந்த நிலத்தை ''மலாதி ஏஷான்'' கட்டுமான நிறுவனத்திற்கு மேம்பாட்டு திட்ட வரைவுடன் 2007 ஆண்டே விற்று விட்டது.
சிலாங்கூரில் 2008ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பக்காத்தான் ராயாட், அரசாங்கம் ஏற்கனவே விற்றுவிட்ட நிலம் மற்றும் முன்னைய அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பங்களை மதிக்க வேண்டிய இக்கட்டுக்கு தள்ளப்பட்டது.
ஆரம்பத்தில் முன்னைய அரசாங்கம் அங்கீகரித்த சில திட்டங்களுக்குச் சீராய்வு செய்ய முற்பட்டு ஆனால் நீதி விசாரணைக்கு ஆட்பட்டு அதில் ஏற்பட்ட தோல்விகளால் கிடைத்த படிப்பினைகளால், முந்தைய அரசாங்கம் அங்கீகரித்த திட்டங்களை பக்காத்தான் ராயாட் அரசாங்கம் மிகக் கவனமாக அணுக வேண்டியிருந்தது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் கம்போங் பாப்பான் விவகாரத்தில் பெரிய அளவில் தலையிட முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் மக்கள் மீது கொண்ட அக்கறையின் விளைவாக மாநில அரசு சுமார் 7 ஏக்கர் நிலத்தை மட்டுமே பெற முடிந்தது.
அதற்கான இசைவு மிகச் சமீபத்திலேயே பெறப்பட்டதால் இந்தத் திட்டத்திற்கு முழுத் திட்டவரைவு வழங்கச் சில காலங்கள் தேவை படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி குடியிருப்பு தேவைகளுக்கு, அருகில் உள்ள வீடமைப்பில் தற்காலிக வீடுகள் ஒதுக்கப் பட்டன. ஆனால் வீடு உடைப்பில் பாதிக்கப் பட்டவர்கள் வழங்கப்பட்ட மாற்று ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்வதும் புறக்கணிப்பதும் அவர்களின் உரிமையாகும்.
அப்படி இருக்க , வீடுகளை இழந்தவர்கள் சிலர் கம்போங் பாப்பானில் தற்காலிக தங்குமிடம் அமைப்பதாக வந்த செய்திகள் குறித்து, இந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் சிலாங்கூர் இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறியது பின்வருமாறு.





