வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கோல லங்காட் தொடர்ந்து கண்காணிக்கும்

2 டிசம்பர் 2025, 9:07 AM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கோல லங்காட் தொடர்ந்து கண்காணிக்கும்

ஷா ஆலம், 2 டிசம்பர்: நவம்பர் 29 அன்று கோல லங்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு, கோல லங்காட் நகரசபை தொடர்ந்து நிலைமையை கண்காணித்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது.

நகரசபையின் விரைவு குழு இன்று காலை முதல் பாதிக்கப்பட்ட பகுதிகளான தாமான் சின்னியா, தாமான் ப்ளூமீரியா, தாமான் ஸெரி ஜரோமாஸ், தாமான் ரோசா, முக்கிய வணிக வீதி 2, தாமான் செஜஹ்தேரா, லபோஹான் டாகாங் கிராமம், புக்கிட் தாடோம்  மக்கள்  மற்றும் புக்கிட் சங்காங் கிராமத்தில் கண்காணிப்பு பணிகளை மேற் கொண்டது.

மேலும் அறிக்கையில், நோர் ஹிஷாம் ஓத்மான் தலைமையில் இரண்டு உறுப்பினர்கள் வாகனத்தைப் பயன்படுத்தி கண்காணிப்பு மேற்கொண்டனர். கண்காணிப்பில் சில பகுதிகள், குறிப்பாக தாமான் ஸெரி ஜரோமாஸ் மற்றும் தாமான் செஜஹ்தேரா, இன்னும் நீரில் மூழ்கியுள்ளது என தெரியவந்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.