இரண்டு தொழிற்சாலைகளுக்கு ஆறு அபராதங்கள் விதிக்கப்பட்டது

2 டிசம்பர் 2025, 3:49 AM
இரண்டு தொழிற்சாலைகளுக்கு ஆறு அபராதங்கள் விதிக்கப்பட்டது
இரண்டு தொழிற்சாலைகளுக்கு ஆறு அபராதங்கள் விதிக்கப்பட்டது

ஷா ஆலம், டிச 2: பூலாவ் இண்டா தொழிற்பேட்டையில் ஏற்பட்ட துர்நாற்றப் பிரச்சனை தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், கிள்ளான் அரச மாநகர் மன்றம் (எம்பிடிகே) இரண்டு தொழிற்சாலைகளுக்கு மொத்தம் ஆறு அபராதங்களை வெளியிட்டுள்ளது.

தொழிற்சாலைகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றி, சுற்றுப்புற குடியிருப்போரின் நலனில் பாதிப்பு ஏற்படாதவாறு செயல்படுவதற்காக அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என எம்பிடிகே தெரிவித்தது.

“உரிமம் இன்றி செயல்பட்டு வந்த ஓர் உலோக செயலாக்க தொழிற்சாலைக்கு UUK 3 (MPK) 2007 கீழ் நான்கு அபராதங்களும், உள்ளூர் அரசு சட்டம் 1976 பிரிவு 69 அடிப்படையில் சுகாதாரத் துறையால் ஒர்ர் அபராதமும், மேலும் UUK 3(1) UUK Hotel (MPK) 2013 கீழ் ஓர் அபராதமும் வழங்கப்பட்டது.

“அதே நேரத்தில், உர தொழிற்சாலை ஒன்று, சேமிப்பு மற்றும் மொத்த விற்பனைக்கான உரிமம் மட்டுமே கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. அந்த தொழிற்சாலைக்கு UUK 3 PTPP (MPK) 2007 அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது,” என்று தெரிவிக்கப்பட்டது.

தொழிற்பேட்டை பகுதிகளில் சட்டத்தை பின்பற்றுதல் தொடர்ந்து உறுதிசெய்யப்பட்டு வருவதையும், விதிமுறைகளை மதிக்காமல் எந்த தொழிற்சாலைகளும் செயல்படாமல் தடுக்கவும், ஒருங்கிணைந்த செயல்திட்டங்கள் தொடரப்படும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.