22 பேர் பட்டாசு வெடிப்பில் காயம்

20 அக்டோபர் 2025, 7:46 AM
22 பேர் பட்டாசு வெடிப்பில் காயம்

கூலிம், அக். 20 — பாயா பெசார் அருகில் நேற்றிரவு நடந்த பட்டாசு வெடிப்பில் 22 பொதுமக்கள் காயமடைந்தனர். இதில் ஒருவருக்கு நெற்றியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் இரவு 12.45 மணியளவில் நடைபெற்றதாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைமை கண்காணிப்பாளர் சுல்கிஃப்லி அஜிசான் தெரிவித்துள்ளார். குற்றத் தடுப்பு ரோந்தில் இருந்த போலீஸ் அதிகாரிகள், பாயா பெசார் சாலையோரத்தில் மக்கள் திரண்டிருப்பதும், போக்குவரத்து நெரிசலும் கவனித்ததாக கூறினார்.

அதிகாரிகள் உடனடியாக உதவி கோரி, மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு வந்தபோது, பலர் காயமடைந்திருந்தனர். மொத்தம் 22 பேர் காயமடைந்த வேளையில் ஒருவரின் நெற்றியில் சுமார் ஐந்து செ.மீ. ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் சிறிய காயங்களுடன் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சம்பவத்திற்குப் பிறகு போக்குவரத்து நிலைமைகள் மீண்டும் சீராகியதாகவும், இரண்டு ஆம்புலன்ஸ்கள் காயமடைந்தவர்களை கூலிம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.