3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

15 ஆகஸ்ட் 2025, 10:08 AM
3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

ஷா ஆலம், ஆகஸ்ட் 15 இன்று இரவு 8 மணி வரை 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்புள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

அவை கிள்ளான், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்கள் ஆகும்.

இதே வானிலைதான் கோலாலம்பூர், பெர்லிஸ், கெடா, கிளந்தான், திரங்கானு, பினாங்கு, பேராக், பகாங், சரவாக், சபா மற்றும் லாபுவான் ஆகிய மாநிலங்களில் நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்துறை கூறியது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் இருக்கும் போது எச்சரிக்கைகள் வெளியிடப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை எச்சரிக்கைகள் என்பது ஒரு வெளியீட்டிற்கு ஆறு மணி நேரத்திற்கு மிகாமல் செல்லுபடியாகும் குறுகிய கால எச்சரிக்கைகள் ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு http://www.met.gov.my, சமூக ஊடக வலைத் தளத்தைப் பார்க்கவும், myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.