ஷா ஆலம், செப் 2: ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நாளும் 1000 அடிகள்,என்ற உடல் நலத்தை மேம்படுத்தும் நடை பயிற்சியை, ஶ்ரீ கெம்பாங்கன் சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாடு செய்துள்ளார்.
RM800 வரையிலான ஷாப்பிங் வவுச்சர்கள் வடிவில் பரிசுகளை வழங்கும் இப்பிரச்சாரம் செப்டம்பர் 30 வரை நடைபெறும் என்று வோங் சியு கி கூறினார்.
"இந்த சுதந்திர மாதத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அழகை பேணுவதுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க ஶ்ரீ கெம்பாங்கன் மக்களை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாக ஒரு நாளைக்கு 10,000 கால் அடிகள் எனும் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார்.
"மெர்டேக்கா என்பது காலனித்துவத்தில் இருந்து நாடு சுதந்திரம் பெற்றது மட்டுமல்ல, நல்ல ஆரோக்கியத்தை கொண்டு இருப்பதும் ஒரு வித சுதந்திரமே என்றார். ஆரோக்கியமானவர்கள் எதற்கும் தயங்கமாட்டார்கள் எவரையும் சார்ந்திருக்கவும் மாட்டோம்," அதுவே மிகப்பெரிய சுதந்திரம் என்று அவர் கூறினார்.
இதில் வெற்றியாளருக்கு RM300 ஷாப்பிங் வவுச்சர் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இரண்டாவது (RM200) மற்றும் மூன்றாவது இடத்திற்கு RM100யும் வழங்கப்படும்.
நான்காவது முதல் பத்தாவது இடம் வரை ஒவ்வொருவரும் RM50 ஷாப்பிங் வவுச்சர் பெறுவார்கள்.


