SELANGOR

ஞாயிறு அன்று மேலும் ஐந்து இடங்களில் மலிவு விற்பனை தொடரும்

16 ஆகஸ்ட் 2024, 4:55 AM
ஞாயிறு அன்று மேலும் ஐந்து இடங்களில் மலிவு விற்பனை தொடரும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 16: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் எதிர்வரும் ஞாயிறு அன்று மேலும் ஐந்து இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும்.

ரெக்ரியாசி திடல், ஜாலான் செந்தோசா 3, தாமான் சீ லியூங் (பண்டமாறான்), புக்கிட் மெலாவத்தி தொகுதியின் சமூக ஒருங்கிணைப்பு மையத்தின் அருகே (புக்கிட் மெலாவத்தி), சூராவ் ஹிடாயா வாகன் நிறுத்தும் வளாகம் (பலாகோங்), டதாரான் கம்போங் ஜாவா (டூசுன் துவா) மற்றும் சூராவ் அல்-உக்வா பண்டார் ஶ்ரீ டாமன்சாரா (புக்கிட் லஞ்சான்) ஆகிய இடங்களில் மலிவு விற்பனை நடைபெறும்.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (PKPS) கிட்டத்தட்ட 3000 இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டுள்ளது. ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த இச்சந்தைக்குச் சிலாங்கூர் அரசு RM40 மில்லியன் மானியத்தைச் செலவிட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5

கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.