SELANGOR

வாகனமற்ற தினத்தில் “சுதந்திர ஓட்டம்“ ஏற்பாடு

8 ஆகஸ்ட் 2024, 3:20 AM
வாகனமற்ற தினத்தில் “சுதந்திர ஓட்டம்“ ஏற்பாடு

ஷா ஆலம், ஆகஸ்ட் 8: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கார் இல்லாத் தினத்தை முன்னிட்டு “சுதந்திர ஓட்டம்“ என்ற நிகழ்வை சுபாங் ஜெயா மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

4.5 கிலோமீட்டர் ஓட்டமானது சுபாங் பரேட், சுபாங் ஜெயாவில் தொடங்கும் மற்றும் ஓட்டத்தை முடித்த முதல் 500 பங்கேற்பாளர்களுக்கு டி-சட்டைகள் மற்றும் பங்கேற்புச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

“இந்த ஓட்ட நிகழ்வில் இலவசமாகப் பங்கேற்க மக்கள் அழைக்கப்படுகிறார்கள.  மேலும் தொலைக்காட்சிகள் மற்றும் சலவை இயந்திரங்கள் உட்பட பல்வேறு அற்புதமான அதிர்ஷ்டக் குலுக்கு பரிசுகளை வெல்லும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

“ஓட்டத்தில் பங்கேற்க விரும்பும் பங்கேற்பாளர்கள் QR குறியீட்டை ஸ்கேன் செய்தால் போதும்” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் போட்டிகள், சுற்றுச்சூழல் மற்றும் மனநலக் கண்காட்சிகளும் நடத்தப்படும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.