SELANGOR

பிஜே ஹாஃப் மராத்தானில் 8,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள்

31 ஜூலை 2024, 6:45 AM
பிஜே ஹாஃப் மராத்தானில் 8,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 31: ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறும் பிஜே ஹாஃப் மராத்தான் என்னும் நெடுந்தூர ஓட்ட போட்டி, 2024 இன் 34வது பதிப்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து 8,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அந்த எண்ணிக்கையில் 38 நாடுகளைச் சேர்ந்த 250 பேர் சர்வதேச பங்கேற்பாளர்களும் அடங்குவர் என்று பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து குறிப்பாகச் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரிலிருந்து 7,000 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டதன் மூலம் இம்முறை பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதன் மேயர் முகமது ஜஹ்ரி சமிங்கோன் தெரிவித்தார்.

"இதன் மூலம் பிஜே ஹாஃப் மராத்தான் 2024ஐ ஒரு மதிப்புமிக்க நிகழ்வாக மாற்றுகிறது. ஏனெனில் இது சர்வதேச ஓட்டப்பந்தய வீரர்களின் பங்கேற்பை வெற்றிகரமாக ஈர்த்தது.

இதில் 30 கிலோமீட்டர் (கிமீ) திறந்த ஓட்டம், 21 கிமீ திறந்த ஓட்டம், 10 கிலோமீட்டர் திறந்த ஓட்டம் மற்றும் ஐந்து மற்றும் ஒரு கிலோமீட்டர் ஓட்டம் என ஐந்து பிரிவுகள் இடம்பெற்றன,” என்று அவர் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

போட்டியை கலகலப்பாக்கும் நோக்கில் முதன்முறையாக ``Fun Run Anime`` என்ற புதிய கருப்பொருள் ஒன்றை ஏற்பாட்டாளர்கள் அறிமுகப்படுத்தியதாக அவர் கூறினார்.

இந்நிகழ்வு எம்பிபிஜே மற்றும் ``Puncak Ventures SRA Sdn Bhd`` ஆகியவை சிலாங்கூர் விளையாட்டு கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.