SELANGOR

நாளை மேலும் 5 இடங்களில் மலிவு விற்பனை

19 ஜூலை 2024, 6:00 AM
நாளை மேலும் 5 இடங்களில் மலிவு விற்பனை

ஷா ஆலம், ஜூலை 19: அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்களை மலிவு விலையில் விற்கும் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டம் நாளை மேலும் 5 இடங்களில் காலை 10 மணிக்குத் தொடரும்.

நாளை சுராவ் அஸ்-சுஹாடா, தாமான் சூரியா பெண்டாமார் (பெலாபோஹான் கிள்ளான்), பாலாய் எம்பிகேகே கம்போங் செலாயாங் பாரு (தாமான் டெம்ப்ளர்), ஜாலான் பிஎஸ் 9, ஜாலான் புக்கிட் செகார் ஜெயா (தெதாத்தாய்), பாலாய்ராயா கம்போங் பத்து பெல்லா (பண்டார் பாரு கிள்ளான்) மற்றும் தாமான் சூரியா செலாயாங் (சுங்கை துவா) ஆகிய இடங்களில் மலிவு விற்பனை நடைபெறும்.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (PKPS) கிட்டத்தட்ட 3000 இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டுள்ளது. ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த இச்சந்தைக்குச் சிலாங்கூர் அரசு RM40 மில்லியன் மானியத்தைச் செலவிட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5

கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.