SELANGOR

வாகன இல்லாத் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள ஓட்ட நிகழ்வில் 1,000 பேர் பங்கேற்பு

10 ஜூலை 2024, 3:35 AM
வாகன இல்லாத் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள ஓட்ட நிகழ்வில் 1,000 பேர் பங்கேற்பு

ஷா ஆலம், ஜூலை 10: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  மெர்டேக்கா மையம், செக்‌ஷன் 14 ஷா ஆலமில் வாகன இல்லாத  தினத்தை முன்னிட்டு, ``Kitar Semula dan Rakan Mahir`` ஓட்டத்தில் மொத்தம் 1,000 நபர்கள் பங்கேற்பர்.

மேலும், காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெறும் என ஷா ஆலம் மாநகராட்சி கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் முகமட் அசார் முகமது ஷெரீப் தெரிவித்தார்.

"இதில் சைக்கிள் ஓட்டுதல், வில்வித்தை, இலவசச் சுகாதார பரிசோதனை, இளைஞர் பஜார், நடமாடும் நூலகம் மற்றும் எம்பிஎஸ்ஏ நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெறும்" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

வருகையாளர்களுக்கு இலவச ஃபார்ம் ஃப்ரெஷ், 100+ பானங்கள் மற்றும் ஷா ஆலம் நடமாடும் அலுவலகச் சேவையும் வழங்கப்படும் என அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.