SELANGOR

நாளை ஷா ஆலம் நடமாடும் அலுவலகம் செக்‌ஷன் 9இல் ஏற்பாடு

5 ஜூலை 2024, 6:48 AM
நாளை ஷா ஆலம் நடமாடும் அலுவலகம் செக்‌ஷன் 9இல் ஏற்பாடு

ஷா ஆலம், ஜூலை 5: நாளை பிளாசா ஷா ஆலம், செக்‌ஷன் 9இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஷா ஆலம் நடமாடும் அலுவலகத்தில் பொதுமக்கள் மதிப்பீட்டு வரி மற்றும் அபராதங்களைச் சரிபார்த்து செலுத்தலாம்.

புகார் கவுண்டர், வணிக உரிமங்களின் நிலையை சரிபார்த்தல் மற்றும் திட்ட புத்தகங்களின் விற்பனை ஆகிய சேவை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என ஷா ஆலம் மாநகராட்சி தெரிவித்தது.

மேலும், வார இறுதி நாட்களில் கவுண்டருக்கு செல்லாமல் மக்கள் மேற்கண்ட சேவைகளைப் பெற இந்த தளம் உதவுகிறது என அதன் கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்பு தலைவர் முகமட் அசார் முகமட் ஷாரிவ் கூறினார்.

“இந்த நடவடிக்கையின் மூலம், சமூகத்தின் நலனுக்காக எம்பிஎஸ்ஏ சேவை முறையை மேலும் வலுப்படுத்த முடியும் என கவுன்சில் நம்புகிறது” என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

நிலுவையில் உள்ள அபராதங்களை செலுத்துவது உட்பட மக்களின் விவகாரங்களை எளிதாக்கும் அணுகுமுறையாக எம்பிஎஸ்ஏ இச்சேவையைப் பல இடங்களில் ஏற்பாடு செய்கிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.