SELANGOR

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா மெகா திட்டம்

13 ஜூன் 2024, 12:46 AM
ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா மெகா திட்டம்

ஷா ஆலம், ஜூன் 13: நாளை மற்றும் சனிக்கிழமைகளில் ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா மெகா திட்டம் ஆறு இடங்களில் நடைபெறும்.

நாளை டதாரான் மஸ்ஜிட் நூருல் இடாயா கம்போங் பண்டான் டாலாம் (பண்டான் இண்டா), டதாரான் பந்தாய் பத்து லாவுட் தஞ்சோங் சிப்பாட் (தஞ்சோங் சிப்பாட்) மற்றும் கொம்லெக்ஸ் பெங்குலு முக்கிம் உலு லங்காட் (டூசுன் துவா) ஆகிய இடங்களில் மலிவு விற்பனை நடைபெறும்.

அதனை தொடர்ந்து, லாமான் பெளகென்வில்லா கம்போங் சுங்கை கெர்தாஸ், பத்து கேவ்ஸ் (சுங்கை துவா), கோலா குபு பாரு தொகுதியின் சமூக சேவை மைய வளாகம் (கோலா குபு பாரு) மற்றும் தாமான் கேம் இரவு சந்தை தளம், பெலாபோஹான் கிள்ளான் (பெலாபோஹான் கிள்ளான்) ஆகிய இடங்களில் சனிக்கிழமை அன்று மலிவு விற்பனை நடைபெறும்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5

கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.