SELANGOR

அம்பாங் ஜெயா ஜியோ பார்க் இரவு ஓட்டம்- வெ.5,000 ரொக்கம் வெல்ல வாய்ப்பு

12 ஜூன் 2024, 8:55 AM
அம்பாங் ஜெயா ஜியோ பார்க் இரவு ஓட்டம்- வெ.5,000 ரொக்கம் வெல்ல வாய்ப்பு

ஷா ஆலம், ஜூன் 12-  அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 29ஆம் தேதி நடைபெறவிருக்கும் அம்பாங் ஜெயா ஜியோ பார்க் இரவு ஓட்டத்தில் பங்கேற்போர் 5,000 வெள்ளிக்கும் மேற்பட்டத் தொகையை வெகுமதியாகப் பெறுவதற்குரிய வாய்ப்பு உள்ளது.

ஏழாவது முறையாக நடத்தப்படும் இப்போட்டிக்கு   இதுவரை 2,200 விண்ணப்பங்கள் கிடைத்துள்ள வேளையில் விண்ணப்பங்கள் இன்னும் வரவேற்கப்படுவதாக நகராண்மைக் கழகத்தின் பொது உறவுப் பிரிவு கூறியது.

அம்பாங் ஜெயா நைட் ரன் என்றப் பெயரில் கடந்தாண்டு நடத்தப்பட்ட இப்போட்டியில் 2,500 பேர் கலந்து கொண்டனர்.

இரவு வேளையில் அம்பாங் நகரினூடே  ஓடும் இந்த நிகழ்வு நகராண்மைக் கழகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் நோக்கில் நடத்தப்படுகிறது.

ஆறு பிரிவுகளாக நடத்தப்படும் இப்போட்டி தாமான் மெலாவத்தி எம்.பி.ஏ.ஜே. மாநாட்டு மையத்தில் இரவு 9.00 மணிக்குத் தொடங்கும்.

இப்போட்டியின் முத்தாய்ப்பு அங்கமாக அதிர்ஷ்டக் குலுக்கும் இடம் பெறும்.

இந்தப் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளோர்    https://www.ticket2u.com.my/event/34256/geopark-ampang-jaya-night 2024 என்ற இணைப்பின் வாயிலாகப் பதிவு செய்யலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.