SELANGOR

ஷா ஆலமில் சில சாலைகள் நாளை அதிகாலை 5.00 மணி முதல் காலை 9.30 வரை போக்குவரத்துக்கு மூடப்படும்

31 மே 2024, 7:25 AM
ஷா ஆலமில் சில சாலைகள் நாளை அதிகாலை 5.00 மணி முதல் காலை 9.30 வரை போக்குவரத்துக்கு மூடப்படும்

ஷா ஆலம், மே 31- இவ்வாண்டிற்கான தேசிய நில வடிவமைப்பு  தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  ஃபன் ரன் எனும் ஓட்டப்பந்தய நிகழ்வை முன்னிட்டு இங்குள்ள  சில சாலைகள் நாளை போக்கு வரத்துக்கு மூடப்படும்.

அதிகாலை 5.00 மணி முதல் காலை 9.30 மணி வரை அச் சாலைகள் மூடப்படும் என்று ஷா ஆலம் மாநகர் மன்றத்தின்   (எம்.பி.எஸ்.ஏ.) வர்த்தக மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் முகமது அசார் முகமது ஷெரீப் தெரிவித்தார்.

பெர்சியாரான் தாசேக் சாலை முழுமையாக நாளை ஜூன் 1 ஆம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5.00 மணி முதல் காலை  9.30 மணி வரை  மூடப்படவுள்ளது

பெர்சியாரான் பண்டாராயா, பெர்சியாரான் பெர்பண்டாரான், பெர்சியாரான் மஸ்ஜிட், பெர்சியாரான் டத்தோ மந்திரி மற்றும் பெர்சியாரான் டாமாய் ஆகிய சாலைகள் அதிகாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை  மூடப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில்  அக்காலகட்டத்தில் மேல்குறிப்பிட்ட சாலைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்  அதேவேளையில் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நடக்கும் படியும்    பொதுமக்களை மாநகர் மன்றம் கேட்டுக் கொள்வதாக முகமது அசார் குறிப்பிட்டார்.

அக்காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட சாலைகளைப் பயன்படுத்துவோர் மாற்று வழிகளைப் பயன் படுத்தவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அவர் சொன்னார்.

மேல் விபரங்களுக்கு மாநகர் மன்றத்தின் வர்த்தக  மற்றும் மக்கள் தொடர்பு துறையை 03-5522 2734 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.