SELANGOR

 300 மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு இலவசப் பெட்ரோல்

21 மே 2024, 3:19 AM
 300 மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு இலவசப் பெட்ரோல்

ஷா ஆலம், மே 21: இன்று 300 மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு இலவசப் பெட்ரோலை ஷா ஆலம் மாநகராட்சி வழங்குகிறது.

``Jom Isi Minyak Motosikal Percuma`` என இலவசமாக ஏற்பாடு செய்துள்ள இத்திட்டம் காலை 10.30 மணிக்குப் புக்கிட் சுபாங், பெர்சியாரான் மெட்டாபாசா மற்றும் செக்‌ஷன் U16 இல் உள்ள பெட்ரோல் நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என  மாநகர்  மன்றம்  முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

"இந்த வாய்ப்பு முதல் 300 மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டுமே" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, எம்பிஎஸ்ஏ இந்த திட்டத்தை செக்‌ஷன் 7இல் உள்ள பெட்ரோனாஸ் பெட்ரோல் நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

ஷா ஆலாமின் வடக்கு மற்றும் தெற்கே இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்த தனது தரப்பு உத்தேசித்துள்ளதாக ஷா ஆலம் மேயர் செரெமி தர்மன் கூறினார்.

"வாய்ப்பிருந்தால், ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டத்தை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம், இதனால் அதிகமான மக்கள் நன்மை பெறலாம்," என்று அவர் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.