கோலாலம்பூர், மே 17: பயிற்சி மருத்துவர்கள் (HO) தேவைப்படும் மாவட்ட மருத்துவமனைகளுக்கு உடனடியாக அவர்களை இடமாற்றம் செய்யுமாறு சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசனுக்கு உத்தரவிட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.
நேற்று எக்ஸ் பக்கத்தில் ஓர் இடுகையின் மூலம், அனைத்து நடுத்தர மற்றும் நீண்ட கால முன்னேற்ற நடவடிக்கைகளும் சுகாதார அமைச்சகத்தால் (கேகேஎம்) செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
"நாடு முழுவதும் 147 கேகேஎம் மருத்துவமனைகள் மற்றும் 3,000க்கும் மேற்பட்ட சுகாதார கிளினிக்குகள் இருப்பதால், நான் நிச்சயமாகப் பல புகார்களைப் பெறுவேன்.
"எனது பல்வேறு சீர்திருத்தங்களை தொடரும் அதே வேளையில், தொடர்ந்து கருத்துக்களையும் விமர்சனங்களையும் அனுப்புங்கள், (தகாத வார்த்தைகளைத் தவிர்க்கவும்) நான் அவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி செயல்படுவேன்," என்று அவர் கூறினார்.
– பெர்னாமா


