SELANGOR

கோலா லங்காட் ரோஜாக் மற்றும் செண்டோல் திருவிழா 2024

16 மே 2024, 7:47 AM
கோலா லங்காட் ரோஜாக் மற்றும் செண்டோல் திருவிழா 2024

ஷா ஆலம், மே 16: மே 26 அன்று கோலா லங்காட் ரோஜாக் மற்றும் செண்டோல் திருவிழா 2024யை முன்னிட்டு வருகையாளர்களுக்கு மொத்தம் 2,024 செண்டால்கள் மற்றும் ரோஜாக்கள் இலவசமாக விநியோகிக்கப்படும்.

கோலா லங்காட்டில் உள்ள டதாரான் பந்திங்கில் நடைபெற்றவுள்ள இந்த நிகழ்வு மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (எம்பிஓஆர்) சாதனையை முறியடிக்கும் முயற்சியாகக் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரே நேரத்தில் விநியோகிக்கப்படும்.

மே 25 ஆம் தேதி காலை 9 மணி தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்சியில் ரோஜாக் மற்றும் செண்டோல் வழங்கும் நடவடிக்கை மேலும் உற்சாகத்தை அளிக்கும் என கோலா லங்காட் நகராண்மை கழகம் தெரிவித்தது.

மே 26ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரே நேரத்தில் ரோஜாக் மற்றும் செண்டோல் சாப்பிட்டு எம்பிஓஆர் சாதனை படைப்போம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து இந்த நிகழ்வை சிறப்பிப்போம் என முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில் பாத்தே வாவ் கப்பலுக்கு வர்ணம் தீட்டுதல், தெஹ் தாரிக் சவால், காஸ்ட்ரோனமிக் ஆய்வு மற்றும் RM1,000 வரை ரொக்கம் வழங்கும் ``மகிழ்ச்சியான குடும்பச் சுற்றுலா`` போன்ற போட்டிகள் நடைபெறும்.

கூடுதலாக, ஜூம்பா, பஜார் விளையாட்டுகள், மலேசிய இன கலாச்சார நிகழ்ச்சிகள், உணவு மற்றும் பானங்கள் விற்பனை மற்றும் மஹ் மேரி ஒராங் அஸ்லி பழங்குடியினரின் கண்காட்சி ஆகியவையும் இடம்பெறும்.

மேல் தகவல்களுக்கு 012-300 4891, 017-673 4374 (ஹனிம்) அல்லது 014-706 2560 (ஹாபிஸ்) தொடர்பு கொள்ளவும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.