SELANGOR

நோன்புப் பெருநாள் சிறப்பு டெலிமூவியைச் சிலாங்கூர் டிவி யூடியூப்பில் காணலாம்

24 ஏப்ரல் 2024, 2:20 AM
நோன்புப் பெருநாள் சிறப்பு டெலிமூவியைச் சிலாங்கூர் டிவி யூடியூப்பில் காணலாம்

ஷா ஆலாம், ஏப் 24 –  மந்திரி புசார் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சிறப்புத் தோற்றத்தில் தோன்றும் “ஆயா பாங்கில்  பாலேக்” என்ற நோன்புப் பெருநாள் சிறப்பு டெலிமூவியைச் சிலாங்கூர் டிவி யூடியூப்பில் காணலாம்.

இந்தப் படத்தில்  ஜைடி ஓமார், ஃபாஸ்லினா அகமது டாவுட்,  ஷாபி நாஸ்விப் போன்ற சில பிரபல நடிகர்களுடன் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ‘துவான் கமில்’ என்ற  ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்துளளார்.

இதற்கு முன்னர் டிவி 2இல்  ஒளிபரப்பாகிய இப்படத்தில் குடும்பச் சிக்கல்கள் தவிர, மக்கள் நலன் சார்ந்த  இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் (ஐ.எஸ.பி.) திட்டம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்துகிறது.

இந்த சிறப்பு  நோன்புப் பெருநாள் திரைப்படத்தில்  ஆட்சிக்குழு உறுப்பினர்களான போர்ஹான் அமான் ஷா, டத்தோ இங் சூயி லிம் மற்றும் வி பாப்பராய்டு ஆகியோரும் தோன்றுகின்றனர்.

கோல லங்காட் மற்றும் ஷா ஆலம்  படமாக்கப்பட்ட  இந்த டெலிமூவி,  ரோடா டாருல் ஏஹ்சான் முன்னெடுப்பு, சிலாங்கூர் அடிப்படை தொழில்நுட்பக் கடனுதவித் திட்டம் மற்றும் வீட்டு உதவி ஆகியவற்றையும் காட்சிப்படுத்தியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.