SELANGOR

``MOT`` மினி கார்னிவலுக்குச் சிறப்பு விருந்தினராக ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு வருகை

22 ஏப்ரல் 2024, 8:13 AM
``MOT`` மினி கார்னிவலுக்குச் சிறப்பு விருந்தினராக ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு வருகை

கோலா குபு பாரு, ஏப் 22: இன்று மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) ஏற்பாடு செய்திருந்த``MOT`` மினி கார்னிவலுக்குச் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு வருகை புரிந்தார்.

இந்நிகழ்வு  உலு சிலாங்கூரில் உள்ள கெர்லிங் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. மேலும். இந்நிகழ்வில் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன.

அதில் ``MyLesenB2`` திட்டம், தலைக் கவசம் பரிமாற்ற திட்டம் (முதல் 1,000 யூனிட்கள்), மோட்டார் சைக்கிள் கருப்பு எண்ணெய் வழங்குதல், போக்குவரத்துத் துறையில் தொழில் வாய்ப்புகள், மலேசிய சாலைப் போக்குவரத்து துறையின் நடமாடும் கவுண்டர் சேவை, JPJeID & MyJPJ பதிவு, ஜேபிஜே டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கான உரை, சாலை பாதுகாப்பு தொடர்பான உரை மற்றும் சாலை பாதுகாப்பு கண்காட்சி ஆகியவை அடங்கும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.