SELANGOR

இவ்வாரம்  AEON Big`` பார்க்கிங் வளாகம், செக்‌ஷன் 23 இல் ஷா ஆலம் நடமாடும் அலுவலக சேவை

3 ஏப்ரல் 2024, 4:33 AM
இவ்வாரம்  AEON Big`` பார்க்கிங் வளாகம், செக்‌ஷன் 23 இல் ஷா ஆலம் நடமாடும் அலுவலக சேவை

ஷா ஆலம், ஏப் 3: இந்த சனிக்கிழமையன்று ``AEON Big`` பார்க்கிங் வளாகம், செக்‌ஷன் 23 இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'ஷா ஆலம் ஆன் வீல்ஸ்' நடமாடும் அலுவலகத்தில் பொதுமக்கள் மதிப்பீட்டு வரி மற்றும் அபராத்ததைச் சரிபார்த்து செலுத்தலாம்.

காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை புகார் கவுண்டர், உரிமங்களின் நிலையை சரிபார்த்தல் மற்றும் திட்ட புத்தகங்களின் விற்பனை ஆகிய வசதிகளும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என ஷா ஆலம் மாநகராட்சி அறிவித்தது.

வார இறுதி நாட்களில் மக்கள் அலுவலகத்துக்குச் செல்லாமல் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதை இத்தளம் எளிதாக்குகிறது என அதன் கார்ப்பரேட் மற்றும் சமூகப் பொறுப்பு இயக்குனர் முகமட் அசார் முகமட் ஷெரீப்பின் கூறினார்.

"இந்த திட்டம் மூலம், சமூகத்தின் நலனுக்காக எம்பிஎஸ்ஏ சேவை முறையை மேலும் வலுப்படுத்த முடியும் என நம்பப் படுவதாக" அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நிலுவையில் உள்ள அபராதங்களை செலுத்துவது உட்பட மக்களின் விவகாரங்களை எளிதாக்கும் வகையில் பல இடங்களில் இந்த முறையைப் எம்பிஎஸ்ஏ நடத்தி வருகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.