SELANGOR

ரம்ஜான் பஜாரில் RM10 மதிப்புள்ள 500 ரஹ்மா டிஜிட்டல் கூப்பன்கள் விநியோகம்

29 மார்ச் 2024, 8:26 AM
ரம்ஜான் பஜாரில் RM10 மதிப்புள்ள 500 ரஹ்மா டிஜிட்டல் கூப்பன்கள் விநியோகம்

ஷா ஆலம், மார்ச் 29: செக்‌ஷன் 3, பண்டார் பாரு பாங்கி ரம்ஜான் பஜாரில் RM10 மதிப்புள்ள 500 ரஹ்மா டிஜிட்டல் கூப்பன்கள் நாளை பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்.

சிலாங்கூர் பிளாட்ஃபார்ம் (பிளாட்ஸ்) மசோக் பஜார் பிரச்சாரத்தை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு பஜார்களில் இந்த விநியோகம் நடைபெறும் என எம்பிஐ யின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு தலைவர் கூறினார்.

வணிகக் கடைகளில் பயன்படுத்த கூடிய டிஜிட்டல் கூப்பன்களை பிளாட்ஸ்சில் பதிவுசெய்துக் கொண்ட கடைகளில்  மட்டுமே பயன்படுத்தலாம் என்று அஹ்மட் அஸ்ரி சைனல் நோர் கூறினார்.

"நாளை மாலை 5 மணி முதல் 6 மணி வரை கூப்பன்கள் விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது," என்றார்.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நாளை மாலை ரம்ஜான் பஜாரை ஆய்வு செய்ய உள்ளார்.

மேலும், பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம் மாநகராட்சிகள் மற்றும் காஜாங் நகராண்மை கழகம் ஆகியவற்றுடன் இணைந்து பிரச்சாரத்தை வெற்றியடையச் செய்ய RM40,000 ஒதுக்கீடு செய்துள்ளதாக எம்பிஐ இதற்கு முன் தெரிவித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.