SELANGOR

RM100 கட்டணத்தில் 60 வியாபாரிகளுக்கு வணிக வாய்ப்பு

22 மார்ச் 2024, 4:48 AM
RM100 கட்டணத்தில் 60 வியாபாரிகளுக்கு வணிக வாய்ப்பு

ஷா ஆலம், மார்ச் 22: பஜார் வணிகத் தளங்களை RM100 என்ற குறைந்த விலையில் 60 வியாபாரிகளுக்குக் கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் வழங்குகிறது.

பண்டார் மலாவதி பேருந்து நிலைய நிறுத்தத்தில் உள்ள சிலாங்கூர் ரும்புன் ராயா பஜார் ஏப்ரல் 1 முதல் 8 வரை எட்டு நாட்களுக்கு நடைபெறும் என்று உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

"நீங்கள் ஐடில்பித்ரி கொண்டாட்டத்திற்கான ஆடை, அணிகலன்கள் மற்றும் பலாகாரங்கள் ஆகியவற்றை விற்பனை செய்பவராக இருந்தால் இந்த பஜார் ராயா 2024 இல் பங்கேற்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் தெரிவித்தது.

"60 வியாபாரிகளுக்கு மட்டும் வணிக இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் கட்டணம் RM100 மட்டுமே" என்று முகநூல் வழியாக எம்பிகேஎஸ் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களை மார்ச் 19 முதல் இணையத்தில் ip3ks.mpks.gov.my என்ற இணைப்பில் சமர்ப்பிக்கலாம் மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் 011-3347 7034 என்ற எண்ணை அழைக்கலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.