SELANGOR

மசூதிகள் மற்றும் சூராவ்களுக்கு RM36,400 ஒதுக்கீடு - ரவாங் தொகுதி

20 மார்ச் 2024, 6:43 AM
மசூதிகள் மற்றும் சூராவ்களுக்கு RM36,400 ஒதுக்கீடு - ரவாங் தொகுதி

ஷா ஆலம், மார்ச் 20: ரவாங் தொகுதியின் சமூக சேவை மையம் அதன் பகுதியில் உள்ள மசூதிகள் மற்றும் சூராவ்களுக்கு RM36,400 ஒதுக்கீடு செய்துள்ளதாகச் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

ஐந்து மசூதிகள் மற்றும் 33 சூராவ்களுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் ரம்ஜான் மாதம் முழுவதும் சமய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக என சுவா வெய் கியாட் கூறினார்.

"ரம்ஜான் தொடர்பான நிகழ்ச்சி அல்லது திட்டங்களின் செலவு உட்பட சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செலவுகள் மற்றும் நிர்வாகத்தை நடத்துவதற்காக இந்த பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. மசூதிகள் மற்றும் சூராக்கள் நமது நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் முக்கியமான மத தளங்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

"இந்த நன்கொடை சமூகங்களுக்கிடையில் நெருங்கிய நட்பைக் கொண்டுவருவதோடு, அவர்களின் வாழ்க்கையின் மதிப்பையும் மேம்படுத்த உதவும் என்று நான் நம்புகிறேன்," என அவர் முகநூல் மூலம் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.