SELANGOR

``MBSA MySave Food @ Bazar Ramadan`` திட்டத்தின் மூலம் 1,425.9 கிலோகிராம் உணவு வெற்றிகரமாகச் சேமிக்கப்பட்டது

20 மார்ச் 2024, 2:53 AM
``MBSA MySave Food @ Bazar Ramadan`` திட்டத்தின் மூலம் 1,425.9 கிலோகிராம் உணவு வெற்றிகரமாகச் சேமிக்கப்பட்டது

ஷா ஆலம், மார்ச் 20: ரம்ஜான் பஜாரில் உள்ள உபரி உணவைச் சேகரித்து தேவைப்படும் குடியிருப்பாளர்களுக்கு ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) விநியோகம் செய்தது.

``MBSA MySave Food @ Bazar Ramadan`` திட்டத்தின் மூலம் மூன்று நாட்களில் 1,425.9 கிலோகிராம் உணவை வெற்றிகரமாகச் சேமித்ததாக முகநூலில் எம்பிஎஸ்ஏ அறிவித்தது.

பஜார் வர்த்தகர்கள் விற்கப்படாத மற்றும் நல்ல நிலையில் இருக்கும் உணவை ``MBSA MySave Food`` கூடாரத்திற்கு அனுப்பலாம். எங்கள் தன்னார்வலர்கள் உதவ தயாராக உள்ளனர்.

`` பெறப்படும் உணவு, தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும்,'' .

விற்கப்படாத உணவின் கழிவுகளைக் குறைக்க உணவின் அளவை நன்கு திட்டமிடுமாறு வணிகர்களுக்கு எம்பிஎஸ்ஏ அறிவுறுத்துகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.