SELANGOR

``எம்பிஎஸ்ஏ மைசேவ் ஃபுட் @ பஜார் ரம்ஜான்`` திட்டத்தின் மூலம் 429.8 கிலோகிராம் உணவு சேகரிப்பு

18 மார்ச் 2024, 2:38 AM
``எம்பிஎஸ்ஏ மைசேவ் ஃபுட் @ பஜார் ரம்ஜான்`` திட்டத்தின் மூலம் 429.8 கிலோகிராம் உணவு சேகரிப்பு

ஷா ஆலம், மார்ச் 18: ``எம்பிஎஸ்ஏ மைசேவ் ஃபுட் @ பஜார் ரம்ஜான்`` திட்டத்தை ஏற்பாடு செய்த முதல் நாளில் ஷா ஆலம் மாநகராட்சி 429.8 கிலோகிராம் உணவு மற்றும் பானங்களை சேகரித்தது.

ஷா ஆலம் ஸ்டேடியம் பிரிவு 13, பிரிவு 17 மற்றும் பிரிவு 19 ஆகிய மூன்று பஜார்களில் குறிப்பிட்ட அனைத்து உணவுகளும் சேகரிக்கப்பட்டதாக முகநூல் வழியாக எம்பிஎஸ்ஏ தெரிவித்துள்ளது.

“முதல் நாளில் மட்டும் 429.8 கிலோ உபரி உணவை எம்பிஎஸ்ஏ சேகரித்தது.

"மேலேவார் அடுக்குமாடி செக்‌ஷன் U1, பாலிடெக்னிக் ஷா ஆலம், சுராவ் அல் ஹிஜ்ரா கென் ரிம்பா அடுக்குமாடி குடியிருப்புகள் செக்‌ஷன் 16 மற்றும் புரோட்டான் பிளாட்ஸ் செக்‌ஷன் 27 ஷா ஆலம் ஆகிய இடங்களில்  அந்த  உணவுகள் விநியோகிக்கப்பட்டன" என்று மாநகர மன்றம்  தெரிவித்துள்ளது.

ரம்ஜான் பஜாரில் விற்கப்படாத உபரி உணவை தேவைப்படுவோருக்கு விநியோகம் செய்யும் திட்டத்தை எம்பிஎஸ்ஏ தொடர்கிறது.

கடந்த ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டம் திங்கள் முதல் வெள்ளி வரை மார்ச் 14 முதல் ஏப்ரல் 3 வரை மூன்று ரம்ஜான் பஜார்களை உள்ளடக்கி இருக்கும்.

இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களில் உள்ள பஜார் வர்த்தகர்கள் விற்கப்படாத உபரி உணவை ``எம்பிஎஸ்ஏ மைசேவ் ஃபுட் கூடாரத்திற்கு அனுப்பலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.