SELANGOR

ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு 37,550 ஜோம் ஷோப்பிங் வவுச்சர்கள் விநியோகம்

14 மார்ச் 2024, 3:28 AM
ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு 37,550 ஜோம் ஷோப்பிங் வவுச்சர்கள் விநியோகம்

ஷா ஆலம், மார்ச் 13: அடுத்த மாதம் வரவிருக்கும் ஐடில்பித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு RM200 மதிப்பிலான 37,550 ஜோம் ஷோப்பிங் வவுச்சர்கள் விநியோகிக்கப்படும் என்று வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

சிலாங்கூரில் உள்ள 56 தொகுதிகளில் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களை இலக்காகக் கொண்ட இத்திட்டம் RM7.510 மில்லியன் ஒதுக்கீட்டை உள்ளடக்கியதாக பாப்பாராய்டு கூறினார்.

"வவுச்சர்கள் அனைத்து தொகுதிகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விநியோக நடவடிக்கை சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.

"வவுச்சர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையைப் பொறுத்தது. அனைத்து பெறுநர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் மற்றும் எதிர்காலத்தில் ஒப்படைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இத்திட்டம் பெறுநர்கள் சுமையைக் குறைக்கும் மற்றும் பண்டிகையின் உபகரணங்களை வாங்கவும் உதவும் என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு சிலாங்கூர் வவுச்சர் திட்டத்திற்கு RM16.48 மில்லியன் ஒதுக்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மாநில அரசு 23,900 வவுச்சர்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.