SELANGOR

கோத்தா கெமுனிங் தொகுதியில்  ஹரி ராயா 2024 க்கான  ஜோம் ஷோப்பிங் வவுச்சர்கள் விநியோகம்

13 மார்ச் 2024, 8:30 AM
கோத்தா கெமுனிங் தொகுதியில்  ஹரி ராயா 2024 க்கான  ஜோம் ஷோப்பிங் வவுச்சர்கள் விநியோகம்

ஷா ஆலம், மார்ச் 13: ஹரி ராயா 2024க் கான   ஜோம் ஷோப்பிங் வவுச்சர்களை தகுதியான கோத்தா கெமுனிங் தொகுதியின் குடியிருப்பாளர்கள் பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் மார்ச் 11, 2024 அன்று திறக்கப்பட்டது.

விண்ணப்பதாரர் கோத்தா கெமுனிங் வாக்காளராக இருப்பது அவசியம். இந்த வவுச்சர் ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே வழங்கப்படும் மற்றும் வீட்டு வருமானம் மாதத்திற்கு RM3,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், விண்ணப்பதாரர் ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமாஸ், ஸ்கிம் இன்சான் இஸ்திமேவா மற்றும் பிங்காஸ் போன்ற உதவிகளைப் பெறாதவராக இருக்க வேண்டும்.

தொடர்ந்து,இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் அடையாள அட்டை நகல் மற்றும் அவரின் கணவன் அல்லது மனைவியின் அடையாள அட்டை நகல் மற்றும் சம்பள சீட்டின் நகல் ஆகியவை தேவை.

பொதுமக்கள் விண்ணப்பப் பாரத்தை https://forms.gle/NiHL8gBiofJfDqfK8 என்ற இணைப்பின் மூலம் பெறலாம்.

இந்த விண்ணப்பம் தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால் +60 3-51314354 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு  கோத்தா கெமுனிங் தொகுதி சேவை மையம் மூலம்  தெரிவிக்கப்படும் என கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.