SELANGOR

கோத்தா கெமுனிங் தொகுதியில் மகளிர் தின விழா 

7 மார்ச் 2024, 6:06 AM
கோத்தா கெமுனிங் தொகுதியில் மகளிர் தின விழா 

ஷா ஆலம், மார்ச் 7: சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் 2024 யை கோத்தா கெமுனிங் தொகுதி அதன் பகுதியில் உள்ள 5 முக்கிய இடங்களில் ஏற்பாடு செய்துள்ளது.

நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் ஆற்றிய பங்கை அங்கீகரித்து பாராட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே, கோத்தா கெமுனிங் தொகுதியில் 8 மார்ச் முதல் 10 மார்ச் 2024 வரை 5 இடங்களில் இந் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

"வனிதா டிஜுலாங் நெகாரா ஜெமிலாங்" என்பது 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தின் கருப்பொருளாகும்.

இந்நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வருகையாளர்கள் ஊதா நிற ஆடைகளை அணிந்து கொண்டாட்டத்தைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது

இடங்கள்:

  1. சூன் (பிரிவு) 12

8 மார்ச் 2024 (வெள்ளிக்கிழமை) -

காலை 8 மணி முதல் 11 வரை

போலா கெராஞ்சாங் மைதானம், தாமான் தாசிக் கோத்தா கெமுனிங்

  1. சூன் (பிரிவு) 7

9 மார்ச் 2024 (சனிக்கிழமை)

காலை 9 மணி

கம்போங் பாரு லஞ்சாங் பொது மண்டபம்

  1. சூன் (பிரிவு) 10

9 மார்ச் 2024 (சனிக்கிழமை)

காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை

பூலாய் செக்‌ஷன் 27 மண்டபம், ஷா ஆலம்

  1. சூன் (பிரிவு) 13 & 14

9 மார்ச் 2024 (சனிக்கிழமை)

காலை 8 மணி

எபிஎஸ்ஏ அஸ்தார் மண்டபம்

  1. சூன் (பிரிவு) 9 & 14

10 மார்ச் 2024 (ஞாயிற்றுக்கிழமை)

பிற்பகல் 3 மணி

அஸலியா மண்டபம்

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.