SELANGOR

அடிப்படை பொருட்களை ஏற்றிச் செல்ல 80 டிரக்குகள் இயக்கப்படும் -கோஹிஜ்ரா

4 மார்ச் 2024, 8:12 AM
அடிப்படை பொருட்களை ஏற்றிச் செல்ல 80 டிரக்குகள் இயக்கப்படும் -கோஹிஜ்ரா

ஷா ஆலம், மார்ச் 4: இந்த ஆண்டு, அடிப்படை பொருட்களை ஏற்றிச் செல்ல 80 டிரக்குகளை இயக்குவதை கோஹிஜ்ரா நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் இத்திட்டம், உணவு டிரக் ஆபரேட்டர்களுக்கு உதவும் முயற்சிகளின் ஒரு பகுதி ஆகும் என்று கோஹிஜ்ரா மேலாளர் முகமட் சுக்ரி இஸ்மாயில் கூறினார்.

"இந்த உணவு டிரக் ஆப்ரேட்டர்களில் சிலர் எந்த திட்டத்திலும் இணைக்கப்படவில்லை. அதனால், கோஹிஜ்ராவில் பதிவுசெய்யப் பட்ட டிரக்குகளை வைத்திருக்கும் தொழில்முனைவோரை இத்திட்டத்தில் பங்கேற்க நாங்கள் அழைக்கிறோம்.

"தற்போது, கோஹிஜ்ரா உணவு விற்பனை செய்யும் 8க்கும் மேற்பட்ட டிரக்குகளை கொண்டுள்ளது. இந்த ஆண்டு  மலிவு விற்பனை பொருட்களை ஏற்றி செல்ல 80 டிரக்குகளாக அந்த பிரிவை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.

நேற்று விஸ்மா கோஹிஜ்ரா மைதானத்தில் நடைபெற்ற கோத்தா ராஜா மடாணி விவசாய கார்னிவல் 2024 இல் சந்தித்தபோது சுக்ரி இஸ்மாயில் இவ்வாறு கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.