SELANGOR

மிட்லண்டஸ் தமிழ்ப்பள்ளி தங்கும் விடுதியில் மாணவர் சேர்ப்பு- விண்ணப்பம் செய்ய பெற்றோர்களுக்கு வேண்டுகோள்

4 மார்ச் 2024, 3:05 AM
மிட்லண்டஸ் தமிழ்ப்பள்ளி தங்கும் விடுதியில் மாணவர் சேர்ப்பு- விண்ணப்பம் செய்ய பெற்றோர்களுக்கு வேண்டுகோள்

ஷா ஆலம், மார்ச் 4 - இங்குள்ள செக்‌ஷன் 7  வட்டாரத்தில் இயங்கி வரும் மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ் பள்ளியின் மாணவர் தங்கும் விடுதி அடுத்த கட்டமாக மேலும் மாணவர்களைத் தங்கி கல்வி கற்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

இதன் தொடர்பாக வசதி குறைந்த மாணவர்கள் குறிப்பாகப் பள்ளிக்கு செல்வதற்கும் கல்வி கற்பதற்கும் சிரமங்களை எதிர்நோக்கும் குடும்ப பின்னணியில் உள்ள மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வசதி நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் பயிலவிருக்கும் ஆண் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ் பள்ளியைத் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தங்கும் விடுதியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள்  0178906852 என்ற எண்களில் மூர்த்தி என்பவரை தொடர்பு கொள்ளும்படி  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.